சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறுகையில், “வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் நாளை முதல் வரும் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்” என்றார்.