ரெயில்வே பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட காவலர்கள் 3 பேர் கைது

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய போலீசாரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் தங்கியிருந்த பயணியை தாக்கி தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். பாதிக்கப்பட்ட பீகார் பயணி பீரெந்திரரெட்டி இதுதொடர்பாக ரெயில்வே போலீசிடம் புகார் கொடுத்து உள்ளார்.

தன்னை தாக்கி பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிஉள்ளார். பீகார் பயணியின் புகாரில் ரெயில்வே ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அதிரடி நடவடிக்கையை தொடங்கினார். இதனையடுத்து விசாரிக்கப்பட்டு தமிழக சிறப்பு படை காவலர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.   கைது செய்யப்பட்ட காவலர்கள் இருதயராஜ், அருள்தாஸ் மற்றும் ராமலிங்கம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.