திமுகவின் முன்னாள் அமைசர் கோ.சி.மணியின் மகன் கைது

திமுகவின் முன்னாள் அமைசர் கோ.சி.மணியின் மகனை அமலாக்க துறையினர் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். முன்னாள் அமைசர் கோ.சி.மணியின் மகன் பெயர் அன்பழகன். கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சார்பில் இந்தியா முழுவதும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் சென்னையில் மட்டும் 12 போலி நிறுவனங்கள் மூலம் பண பரிவர்த்தனை நடத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பாக லியாகத்அலி என்பவரை கைது செய்த அமலாக்க துறை அவரிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்பழகன் மூலம் 80 கோடி ரூபாய் வரை பண பரிவர்த்தனை நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்த அன்பழகனிடம் நடைபெறும் விசாரணையில் பல தகவல்கள் வெளிவரலாம் என்றும் சொல்லப்படுகிறது.