நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பயிற்சி பெற சி.டி.வடிவில் கையேடு

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள தகவலில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ளும் விதமாக 54,000 கேள்வி மற்றும் பதில் அடைங்கிய சி.டி. வடிவில் கையேடு மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த சி.டி.கையேடு 30 நிமிடம் அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி இல்லை என்று சொல்லப்படுவதால் மாணவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க தமிழக அரசு இந்த சி.டி.முறையை கொண்டுவந்துள்ளது.

நீட் விவகாரத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஒருபக்கம் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டாலும், மற்றொரு வகையில் அதற்கான பயிற்சிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது.