சிங்கப்பூர் அதிபர் தேர்தல் வருகிற செப்டம்பர் மாதம் நடக்கிறது. அதில் சிங்கப்பூர் பாராளுமன்ற சபாநாயகராக இருந்த ஹலிமா யாகோப் (62) என்ற முஸ்லிம் பெண் போட்டியிடுகிறார். இதன் மூலம் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக சபாநாயகர் பதவியை இன்று அவர் ராஜினாமா செய்தார். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் பாராளுமன்ற சபாநாயகராக பதவி வகித்தார். இவர் மக்கள் செயல்பாட்டு கட்சியை சேர்ந்தவர்.
தற்போது தேர்தலில் போட்டியிடுவதால் அக்கட்சியில் இருந்தும் விலகினார். கடந்த 40 ஆண்டுகளாக பொது வாழ்வில் உள்ளார். கடந்த ஆண்டு சிங்கப்பூர் அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இந்த அதிபர் தேர்தலில் சிங்கப்பூரில் வாழும் மலேசியாவை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். எனவே, அதற்கான இட ஒதுக்கீட்டில் அவர் போட்டியிடுகிறார். கடந்த 2001, 2006, 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களில் மலேசிய மக்களுக்கான ஒதுக்கீட்டில் போட்டியிட்டார்.