சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு

இன்று இரவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த வானியல் நிகழ்வை காண்பதற்காக டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரகணத்தைக் காண சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இது குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்று ஏற்படும் சந்திர கிரகணத்தின் ஒரு பகுதியை வெறும் கண்களால் பார்க்கலாம். இந்த கிரகணம் இரவு 10.52 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.48 மணி வரை நீடிக்கும். இன்று ஏற்படும் சந்திர கிரகணத்தின் ஒரு பகுதியை உலகின் பல நாடுகளில் இருந்து பார்க்க முடியும். மேலும் ஆப்ரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் இதனை பார்க்கலாம். இந்தியாவில் கிரகணத்தை பார்க்க சிறப்பு தொலைநோக்கிகள் அரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள சுற்றுலா பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் சந்திர கிரகணத்தை இலவசமாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கிரகணம் 5 மணி நேரம் ஒரு நிமிடம் வரை நீடித்து இருக்கும். இவ்வாறு விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 21ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.