போட்டியாளர்களை தற்கொலைக்கு தூண்டுகிறதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் அனைவராலும் ஒதுக்கப்பட்ட போதிலும் துணிச்சலாக இருந்த நடிகை ஓவியா, ஆரவ் மீது கொண்ட காதல் தோலியடைந்ததன் காரணமாக தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அடம்பிடித்து வந்த நிலையில்  திடீரென நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சக போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்ட நடிகர் பரணியும் கிட்டத்தட்ட பைத்தியவம் பிடித்தவர் போல் மாறினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் சுவரைத்தாண்டி குதிக்கும் விபரீத முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.

இங்கு மட்டுமல்ல தெலுங்கு மற்றும் இந்தி பிக்பாஸிலும் இதே போன்ற நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன.இது ஸ்கிரிப்டெட் ஷோ என்று பரவலாக பேசப்பட்டாலும் போட்டியாளர்களை உளவியல் ரீதியாக பாதிக்க செய்து, தற்கொலைக்கு தூண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனே தடைசெய்யவேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வருகின்றனர்.