காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குராஜாத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றிருந்தார். அப்போது அவருடைய வாகனம் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் உள்ள அணைத்து கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகள் மீது வன்முறையை ஏவும் செயல்கள் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.