காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இன்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அவரது அடையார் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பிறகு செய்தியார்களிடம் பேசிய விஜயதாரணி, அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகனுடைய மாமியார் சந்தானலட்சுமி அம்மையார் மறைவையொட்டி சந்தித்து துக்கம் விசாரித்தேன். இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. கட்சியை பலப்படுத்தும் தினகரன் செயல் பாராட்டுவதாகவும், பாஜகவின் செயலை கண்டிக்காவிடில் அதிமுக நிலைக்காது. ஆளும் கட்சியின் சுதந்திரத்தை பாஜக பறித்துள்ளது என்று விஜயதாரணி குற்றம் சாட்டினார்.