BiggBoss இந்நிகழ்ச்சி மூலம் டிஆர்பி ஏறிவிட்டதாக தொலைக்காட்சியே தங்களுடைய சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.BiggBoss நிகழ்ச்சி தொலைக்காட்சியின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது என்று கூறலாம்.இந்த நிலையில் BiggBoss ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சியின் பொது மேலாளர் ஒரு ஆங்கில நாளிதழில் அளித்த பேட்டியில், இந்நிகழ்ச்சிக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை.100% மேலாக ரேட்டிங் உயர்ந்துள்ளது. நிகழ்ச்சியை பொறுத்தவரை அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டும் என எண்ணுகிறோம், எங்கள் பொறுப்பை உணர்ந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.