பெண் தீயிட்டு தற்கொலை

கோவில்பட்டி செண்பகா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் இவர் தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லெட்சுமியம்மாள். இவர்களுக்கு 2 மகள், 1மகன் உள்ளனர்.பெண்களுக்கு திருமணமாகி விட்டது. லெட்சுமியம்மாள் தனது,கணவன் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று லெட்சுமியம்மாள் வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

மேலும் ஜன்னல் வழியாக பார்த்த போது லெட்சுமியம்மாள் முழுவதும் தீ காயங்களுடன் உயிரிழந்து காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். வீட்டிற்குள் எரிந்து கொண்டு இருந்த தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர். மேலும் போலீசார் லெட்சுமியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.