காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை கடந்த மாதம் 11ஆம் தேதி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வருகிறது.
கர்நாடக அரசு மற்றும் கேரள அரசின் வாதங்களைத் தொடர்ந்து தமிழக அரசின் வாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய வாதத்தின்போது, தமிழக அரசு ஏன் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புதிய அணைகளை கட்டும் அளவுக்கு தமிழகத்தில் புவியியல் அமைப்பு இல்லை என தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.