‘எங்கும் ஊழல், எதிலும் ஊழல்’ என தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக எச்சரிக்கை மணியடித்து வருகிறார் கமல். இதனால் ஆட்சியாளர்களுக்கு அவர் ‘உத்தம வில்லன்’ போல காட்சி தருகிறார். அதற்கு, “பொத்தாம் பொதுவாக சொல்லாமல், பொறுப்பை உணர்ந்து ஆதாரத்தோடு சொல்லணும்!,” என அமைச்சர்கள் ஆதங்கப்பட்டனர். உடனே, “ஊழலுக்கான ஆதாரங்களை அமைச்சர்களின் இணையதளத்திற்கு அனுப்புங்கள்!,” என தனது ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை போட்டார் கமல்.
இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆட்சியாளர்கள், அவசர அவசரமாக தங்களது இணையதளப் பக்கங்களை மூடினர். இந்நிலையில், ‘அழுகிய முட்டை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது! பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்துக்குப் பெருமையே எனினும், இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படியே நடக்கவும். சட்ட மீறல்கள் நம் தரப்பில் கூடாது!’ என தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.