நடிகை பாவனா வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள நடிகர் திலீப் மேலும் ஒரு புகாரில் சிக்கியுள்ளார். திலீப்புக்குச் சொந்தமான சாலக்குடியில் உள்ள டி சினிமாஸ் நிறுவன கட்டிடம், பொது இடத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டதாக திருச்சூர் ஊழல் கண்காணிப்பு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில், திலீப் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரிக்க வருவாய் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் விசாரணை செய்து, வரும் செப்டம்பர் 13ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது.