ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கொஹைன் கூறுகையில், 2014 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் கிடைத்த புள்ளிவிவரங்களின் படி ரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2014ஆ16 வரை 1607 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கில் தொடர்புடைய 1216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வேயில் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 344 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும் பெண்கள் பெட்டிகளில் பெண் போலீசார் நியமிக்கப்பட்டிருப்ப தாகவும் அமைச்சர் கூறினார்.