வேளச்சேரி, சென்னை – அக்டோபர் 2026: ஜோயாலுக்காஸ், உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் தனது வேளச்சேரி, சென்னை ஷோரூமில் 2026 அக்டோபர் 9 முதல் ‘பிரிலியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ நடத்துகிறது. இந்தக் கண்காட்சியில் வைர நகைகளின் கைவினைத்திறன், நேர்த்தி மற்றும் புதுமையை கொண்டாடும் பிரமிக்கவைக்கும் அணிகலன்கள் இடம்பெறுகின்றன.
மணமகளுக்கான பிரமாண்டமான நகைத் தொகுப்புகள் முதல், அன்றாடம் அணிய ஏற்ற நவீன மினிமலிஸ்ட் டைமண்ட்-காலத்தால் அழியாத அழகிய பாரம்பரியத்தையும் நவீன அழகியலையும் இணைக்கும் நகைகளை இந்தக் கண்காட்சி வழங்குகிறது. ஒவ்வொரு வடிவமைப்பும் ஒரு தனித்துவமான படைப்பு; கண்காட்சி நடைபெறும் குறுகிய காலத்துக்கு மட்டுமே கிடைக்கும்.
இது குறித்து ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான டாக்டர். ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது: “பிரிலியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ என்பது வைரங்களின் மிதமான பெருமைக்கும், நகை வடிவமைப்பில் முழுமைத்தன்மையை நோக்கிய எங்கள் கலைப்பயணத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த முயற்சியாகும். வேளச்சேரி, சென்னை எங்கள் இதயத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. திருவிழாக் காலத்தை முன்னிட்டு இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த நகைத் தரத்தைக் கொண்டாட விரும்பும் பிரமிக்கவைக்கும் வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் கண்டறிய ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறோம்” என்றார்.
இந்தச் சிறப்பு நிகழ்வை முன்னிட்டு, கண்காட்சி நடைபெறும் காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் டைமண்ட் நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படும். இது அவர்களின் ஷாப்பிங் அனுபவத்திற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கும்.
‘பிரிலியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’, 2026 அக்டோபர் 25 வரை வேளச்சேரி, சென்னை ஷோரூமில் பிரத்தியேகமாக நடைபெறும். ஆடம்பரம், அன்பு மற்றும் காலத்தால் அழியாத அழகின் கொண்டாட்டத்திலிருந்து வெளிவரும் அற்புதமான டைமண்ட் உலகத்தை நேரில் கண்டுரசிக்க அனைத்து வாடிக்கையாளர்களும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். கவர்ச்சியின் கதையைச் சொல்லும் வைர நகைகளின் அற்புத உலகத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம்.



