தமிழக மின்சார வாரியத்தினை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை மாற்ற வேண்டும்

கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 14வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சின்னசாமி, துணை பொது செயலாளர் ராஜாமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் தமிழக மின்சார வாரியத்தினை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை மாற்ற வேண்டும், 7வது ஊதியக்குழு முடிவுகளை அமுல்படுத்த வேண்டும், காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் செயல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட வேண்டும்,ஓய்வு பெற்ற பகுதி நேர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.