கோவில்பட்டியில் லெட்சுமி மில் நூற்பாலையில் மாவட்ட காசநோய் மையம் மற்றும் கடம்பூர் காசநோய் அலகு சார்பில் காசநோயில்லா இந்தியா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை துணை இயக்குநர் சுகாதாரபணிகள்(காசநோய்) மருத்துவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் தொழிலாளர்களுக்கு காசநோய் அறிகுறிகள் குறித்தும், தடுப்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து தொழிலாளர்களுக்கு காசநோய் பரிசோதனை நடத்தப்பட்டது.கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பளர் மருத்துவர் கமலவாசன், கடம்பூர் ஆரம்பசுகதார நிலையம் மருத்துவர் விஜிலா ஆகியோர் தலைமையிலான குழவினர் பரிசோதனை செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட மில் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.