கோவில்பட்டி நகராட்சியில் நிலவும் லஞ்ச ஊழலை கண்டித்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் 2வது குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், நகர மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்கழிப்பறை கட்டிய பயனிகளுக்கு பணம் வழங்கமால் இருப்பதை கண்டித்தும், நகரில் சுகாதார வசதி, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அக்கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நகராட்சி அலுவலகத்தினை முற்றுக்கையிட வந்தனர்.
அவர்களை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீசார் நகராட்சி நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி வாயில் முன்பு தங்களது கோரிக்கைகளைவலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்டகுழு உறுப்பினர் விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.