மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஆல் பாஸ் ” அக்டோபர் 9- ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது .
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் ( One Step Entertainment ) என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் மோகனா .ஆர் தயாரித்துள்ள படம் “ஆல் பாஸ் ”
‘ நிறங்கள் மூன்று’, ‘தருணம்’, போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.
பிக் பாஸ் மூலம் மக்களிடையே பிரபலமாகி ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா,ஆர், சத்யா மற்றும் சஞ்சய், கோகுல், நிகில் மூவரும் பெயர் சொல்லும் பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
‘ பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான சரத் லோகித்ஷவா இந்தப் படத்தின் வில்லனாக நடிக்க, ‘பாபநாசம்’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் பஷீர், ‘பைசன்’ படத்தில் பி.டி வாத்தியாராக நடித்த அருவி மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் மூர்த்தி , கலையரசன் கண்ணுசாமி ஆகியோர் நகைச்சுவைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.
‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’ , ‘தகராறு’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் .
பாடல்களை மோகன் ராஜன், நிலவை பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன்.T பணியாற்றியுள்ளார்.
பிரபல நடன இயக்குநர் I.ராதிகா நடனம் அமைத்துள்ளார்.
சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் மேற்கொண்டார்.
ஒப்பனை – எல்.வி.ராஜா,
உடைகள் – ஏ.எஸ்..வாசன்,
ஸ்டில்ஸ் – அண்ணாதுரை,
விளம்பர வடிவமைப்பு – கிப்சன் UGA,
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்,
தயாரிப்பு – மோகனா. ஆர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.
படம் பற்றி இயக்குநர் மைதீன் பேசும்போது,
” இந்தத் திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்ட் கலந்த கதை கொண்டது.
வடசென்னை என்றாலே இதுவரைக்கும் அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் பகை கொலை என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். முதல்முறையாக இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.
வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம். படத்தை இம்மாதம் ( அக்டோபர் ) 2 – ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம் பொதுமக்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் பத்திரிகை, ஊடக நண்பர்கள் அனைவரும் எங்களது படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.



