காதல்,சிரிப்பு, குழப்பம் என இருவேறு உலகங்களை ஒன்றிணைத்த ஒரு அழகான கதை தற்போது உங்கள் இல்லங்களை தேடி வருகின்றது.
காதல், குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை புதுமையான கோணத்தில் கொண்டு வந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அன்பே டயானா, ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV-ல் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியராக வெளியாகிறது.
கலகலப்பான, சுத்தமான, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய feel-good ரொமாண்டிக் காமெடியாக இப்படம் பாராட்டுகளை பெற்றது. இதில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை அழகாகக் கலந்து ஒரு அழகான அனுபவத்தை தருகின்றது.
சென்னையின் பரபரப்பான பெரம்பூர் பின்னணியில் உருவாகியுள்ள அன்பே டயானா, பழமைவாத குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் சுதந்திரமான சிந்தனையுடன் வாழும் ஆங்கிலோ-இந்திய பெண் ஒருவர் நுழையும் போது ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களைச் சொல்கிறது இந்த படம்.
மாறுபட்ட இரு உலகங்கள் ஒன்றிணையும்போது, காதல், சிரிப்பு, குடும்ப எதிர்பார்ப்புகள், ஒரு அழகான, அதே நேரத்தில் குழப்பம் நிறைந்த பயணம் தொடங்குகிறது.
பரி இளவழகன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்..கலாச்சாரம் மற்றும் குடும்ப எல்லைகளைக் கடந்து மலரும் காதலின் சவால்களை அனைவருக்கும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய விதத்தில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, ரம்யா ரங்கநாதனின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. திரையில் அவரது நடிப்பு Pure Magic எனவும் சொல்லப்பட்டுள்ளது..
படத்தின் பயணம் மற்றும் டிஜிட்டல் பிரீமியர் குறித்து எழுத்தாளர், இயக்குநர் மற்றும் கதாநாயகன் பரி இளவழகன் கூறுகையில்,
“அன்பே டயானா படத்தில் எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என மூன்று பொறுப்புகளை ஏற்றது என் வாழ்க்கையில் மிகவும் அழகான மற்றும் மனநிறைவைத் தந்த பயணங்களில் ஒன்று,இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. திரையரங்குகளில் ரசிகர்களிடமிருந்து கிடைத்த அன்பும், ஆரவாரமும், மகிழ்ச்சியும் எங்களை உண்மையிலேயே நெகிழச் செய்தது.தற்போது Sony LIV-ல் இப்படம் வெளியாக இருப்பதன் மூலம் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைய முடியும் என்பதில் மகிழ்ச்சி.. குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து அன்பே டயானாவின் காதல், கொண்டாட்டம், மேஜிக்கை,வீட்டிலிருந்தபடியே அனைவரும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
Million Dollar Studios, Neo Castle Creations மற்றும் Era Entertainments ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள அன்பே டயானா காதல், நகைச்சுவை, உணர்வு மற்றும் குடும்ப உறவுகளை ஒன்றிணைக்கும் ஒரு பொழுதுபோக்கு கதையாக உருவாகி இருக்கின்றது..
முற்றிலும் மாறுபட்ட இரு உலகங்களைச் சேர்ந்த இருவர் காதலில் விழும்போது என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்கிறது இந்த படம்.
இந்த ஆகஸ்ட் மாதம் Sony LIV-ல் காதல் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. முதலில் ஆகஸ்ட் 21 அன்று சென்னை லவ் ஸ்டோரி வெளியாகியது.. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28 அன்று அன்பே டயானா வெளியாகிறது.
கிரண் அப்பாவரம் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் உருவாகியுள்ள சென்னை லவ் ஸ்டோரி, சென்னையின் பின்னணியில் காதல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களை எதிர்கொள்ளும் இரு இளைஞர்களின் கதையைச் சொல்கின்றது..
இந்த இரண்டு படங்களும் இணைந்து Sony LIV பார்வையாளர்களுக்கு காதல், சிரிப்பு, உணர்வு மற்றும் feel-good பொழுதுபோக்கின் சிறப்பான அம்சங்களை வழங்குகிறது.
The wait is finally over..காதல், சிரிப்பு மற்றும் சென்னை ஸ்டைல் குழப்பம் நிறைந்த ‘அன்பே டயானா-வை’ ஆகஸ்ட் 28 முதல் Sony LIV-ல் காணுங்கள்.


