மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க டிரெய்லர் வெளியாகியுள்ளது. குடும்ப பாசம், ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில், குடும்பத்திற்காக எதையும் செய்யத் துணியும் மனிதராக ரவி தேஜா நடித்துள்ளார்.
மதுப்பழக்கம் கொண்ட அவர், ஐயப்ப மாலை அணியும் காலத்தில் அமைதியான மனிதராக மாறுகிறார். இதற்கிடையே கிராமத்தில் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அந்தக் கொலைகளின் பின்னணி என்ன என்பதே கதையின் முக்கிய மர்மமாக உள்ளது.
பிரியா பவானி ஷங்கர், சாய் குமார், ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 21ஆம் தேதி ‘இருமுடி’ திரையரங்குகளில் வெளியாகிறது.


