தூத்துக்குடி அணிக்கு TNPL தொடரில் பங்கேற்க இருந்த தடை நீக்கம்

கடந்த ஆண்டு TNPL கிரிக்கெட் தொடரில் ஆல்பர்ட் tuti பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு இந்தியன் வங்கியின் தூத்துக்குடி கிளை, டெபாசிட் தொகையை தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திடம் செலுத்தியது. இந்த தொகையை 6 மாத காலத்திற்குள் தூத்துக்குடி அணி திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிலையில், ஒராண்டு ஆகியும் தொகை செலுத்தப்படவில்லை.

இது குறித்த வழக்கில், டெபாசிட் தொகையை திருப்பிச் செலுத்தும்வரை நடப்பு தொடரில் தூத்துக்குடி அணி விளையாடுவதற்கு இடைக்கால தடை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இருதரப்பு ஒப்பந்தப்படி ஓரு கோடி ரூபாயை இந்தியன் வங்கிக்கு செலுத்திவிட்டு மீதமுள்ள 1 கோடியே 69 லட்சத்துக்கு தூத்துக்குடி அணி சார்பில் உறுதிமொழி பத்திரம் வழங்கப்பட்டது. இதையேற்ற நீதிமன்றம், TNPL போட்டியில் விளையாட தூத்துக்குடி அணிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.