‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் வெளியாகி மேலும் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த பாடலில் யாஷ் மற்றும் கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து திரையில் தோன்றி, அவர்களின் காதல் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது. விஷால் மிஸ்ரா இசையமைத்து பாடியுள்ள இந்தப் பாடலின் தமிழ் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த பாடல் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

