‘முதற்கனல்’ விமர்சனம்

ஆர்.வெங்கடரமணன் இயக்கத்தில், அஸ்வின் விஸ்வநாதன், ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ், ஆர்.வெங்கடரமணன், டி.ராஜேந்திரன் மற்றும் பல நடிப்பில் வெளிவரவுள்ள படம் முதற்கனல்.

தொழில்நுட்ப  கலைஞர்கள்

இயக்குனர் : ஆர்.வெங்கடரமணன்

தயாரிப்பாளர் : ஆர்.போத்திராஜ்

ஒளிப்பதிவாளர் : கந்தசுவாமி கோபால்

பின்னணி இசை : மீரா லால்

எடிட்டர் : திஸ்யன் சாரதி

இணை இயக்குனர் : ஆர்.முத்துக்குமரன்

 மக்கள் தொடர்பு :  கே.எஸ்.கே.செல்வகுமார்

இன்றைய இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்தின் ஆபத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் ‘முதற்கனல்’.

வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற இலக்குடன் இருக்கும் ஒரு இளைஞன், தவறான நட்பால் போதைப்பொருள் வலையில் சிக்கிக் கொள்கிறான். அதனால் அவனது வாழ்க்கை எப்படி மாறுகிறது? அந்தச் சூழலில் இருந்து மீண்டு தனது கனவுகளை அடைகிறானா? என்பதைக் விறுவிறுப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர். வெங்கடரமணன். போதனை செய்யும் விதத்தில் அல்லாமல், சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

கதாநாயகன் அஸ்வின் விஸ்வநாதன் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு சாதாரண இளைஞனின் கனவுகள், தடுமாற்றங்கள், மனவேதனை மற்றும் மீண்டு வருவதற்கான முயற்சிகளை இயல்பாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். அனைவரின் பங்களிப்பும் கதைக்கு வலு சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் கந்தசுவாமி கோபாலின் காட்சியமைப்பு படத்தின் த்ரில்லர் உணர்வை மேலும் உயர்த்துகிறது. காட்சிகள் நேர்த்தியாகவும் ரசிக்கும்படியும் அமைந்துள்ளன.

மீரா லாலின் பாடல்களும் பின்னணி இசையும் கதையுடன் நன்றாக பொருந்துகின்றன. குறிப்பாக சஸ்பென்ஸ் காட்சிகளில் பின்னணி இசை கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.

எடிட்டர் திஸ்யன் சாரதி படத்தின் வேகத்தை சரியாகக் கையாள்ந்திருப்பதால், படம் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் நகர்கிறது.

மொத்தத்தில், ‘முதற்கனல்’ பொழுதுபோக்குடன் சமூக விழிப்புணர்வையும் இணைத்து சொல்லும் ஒரு நல்ல முயற்சி. சஸ்பென்ஸ், உணர்வு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை சமநிலையுடன் சொல்லும் இந்த திரைப்படம் ஒருமுறை கண்டிப்பாக பார்க்கக்கூடிய படைப்பாக அமைந்துள்ளது.