திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ராஜ்யசபா எம்.பி யுமான சச்சின் டெண்டுல்கர் இன்று காலை தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தீர்த்த பிரசாதங்களை வழங்கினார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த போது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அப்போது ரசிகர் ஒருவர் வெங்கடேஸ்வரா பெருமாள் போட்டோ வழங்க முயன்ற போது அவரை தடுத்த போலீசாரும் தேவஸ்தான அதிகாரிகள் தடுத்து திருப்பி அனுப்பினர். இதை பார்த்த சச்சின் டெண்டுல்கர் அந்த ரசிகரை அருகில் அழைத்து அவர் கொண்டு வந்த போட்டோவை பெற்று கொண்டு அவருடன் சேர்த்து போட்டோ எடுத்து கொண்டு அனுப்பினார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.