சிங்கீதம் விமர்சனம்

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், அஹல்யா பம்ரூ, அயான், ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சிங்கீதம்.

நாயகன் பிரதாப் (அயான்) ஜெயில் இருந்து வெளியே வருகிறார் வந்ததும் அவருடைய அப்பாவிற்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் கிராமத்தில் இருப்பதை வக்கீல் ஒருவர் அவரிடம் சொல்கிறார். 

அதனைக் கேட்டதும் அந்த நிலத்தை விற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த கிராமத்திற்கு செல்கிறார். அங்கு சென்றாள் அந்த நிலம் முழுவதும் பாலைவனமாக இருக்கிறது ஒரே ஒரு பெரிய மரம் மட்டுமே அங்கு இருக்கிறது. 

அங்கே தங்கத்தை எடுப்பதற்காக சுரங்கம் தோண்டுவதால் அந்த நிலம் பாலைவனமாக மாறி உள்ளது. 

அந்த கிராமத்தில் இருக்கும் பாதி நிலத்திற்கு உரிமையாளராக இருக்கிறார் ரேணு (ஷாலினி கொண்டேபூடி) அந்த நிலத்தை வெளிநாட்டுக்காரரிடம் விற்றுவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு விளையாடு செல்வதற்கு எதிர்க்க விட்டுக் கொண்டிருக்கிறார். 

அங்குள்ள மக்களை சுரங்கத்தை தோண்டும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். நாயகி கௌரியோ (அஹல்யா பம்ரு) அதனை எதிர்த்து போராடி வருகிறார். அங்கு இருக்கும் ஒற்றை மரத்திற்கு கௌரியே பாதுகாப்பாகவும் இருந்து வருகிறார். 

ஒரு நாள் அந்த மரத்தை வெட்டுகிறார்கள் கௌரி வெட்ட வேண்டாம் என்று எவ்வளவோ போராடியும் அந்த மரத்தை வெட்டி விடுகிறார்கள். இதனால் கௌரி கோபமடைந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். 

அதன் பிறகு மறுநாள் காலையிலிருந்து அந்த கிராமத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் பேசுவதும் பாடலாகவே மாறிவிடுகிறது சாதாரணமாக பேச முடியாமல் எந்த வார்த்தை பேசினாலும் பாட்டு போல் வருகிறது. 

இதனால் இந்த ஊரைவிட்டு சென்றுவிடலாம் என்று மக்கள் அனைவரும் முடிவெடுத்து செல்லும் சமயத்தில் அங்கு இருக்கும் ஒரே பாலமும் உடைந்து விடுகிறது. 

அந்த ஊரில் இருந்து யாரும் எங்கும் செல்ல முடியாமல் அங்கே இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு இந்த சாபம் எப்படி நீங்கியது? ஊர் மக்கள் அனைவரும் தங்களுடைய தவறை உணர்ந்து திருந்தினார்களா? இல்லையா? என்பதே சிங்கீதம் படத்தோட மீதிக்கதை. 

அஹல்யா பம்ரூ கௌரியாக தனது கதாபாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். 

அயான் பிரதாப் வேடத்தில் நம்பகமான நடிப்பை வழங்குகிறார். 

ஷாலினி கொண்டேபூடி மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையான உணர்ச்சி ஆழத்தை அளிக்கின்றன. 

ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா, பெனர்ஜி உள்ளிட்ட துணை நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தனது அனுபவத்தை பயன்படுத்தி கதையை எளிமையாகவும் ரசிக்கும்படியும் நகர்த்தியுள்ளார். 

தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை திரைப்படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது. குறிப்பாக பின்னணி இசை பல காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் அங்கூர் சி காட்சிகளை அழகாகப் பதிவு செய்துள்ளார். 

கலை இயக்குநர் அரவிந்த் மூலே உருவாக்கிய காட்சியமைப்புகள் கதையின் சூழலை நம்பகமாக உருவாக்குகின்றன.

ஆடை வடிவமைப்பாளர் அஜய் குமார் நம்பள்ளாவின் பணி கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.