லின் ஹய்டா இயக்கத்தில், உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் பூனி பியர்ஸ் : தி ஹிட்டன் ப்ரோடெக்டர்.
காட்டுல சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்குற கரடி சகோதரர்கள் பிரையர், பிராம்பிள் மற்றும் அவங்க நண்பன் விக். சீன புத்தாண்டு சமயத்துல இவங்க ஒரு பழங்கால கோவிலுக்கு போறாங்க.
அங்கதான் சீன புராணங்கள்ல வர்ற “நியான்” அப்படிங்கிற புகழ்பெற்ற வருட மான்ஸ்டரை பார்க்குறாங்க. நியான் ஒரு மாய உயிரினம். அது இவங்க மூணு பேருக்கும் எதிர்பாராத விதமா மாய சக்திகளை கொடுக்குது. பிரையருக்கு ஒரு சக்தி, பிராம்பிளுக்கு ஒரு சக்தி, விக்குக்கு ஒரு சக்தி.
அந்த சக்திகள் கிடைச்ச உடனே இவங்க “Eve City” அப்படிங்கிற மறைவான நகரத்துக்குள்ள இழுத்துட்டு போகப்படுறாங்க. அது சாதாரண உலகம் இல்ல. மாயம், மந்திரம் நிறைஞ்ச, குழப்பமான ஒரு இடம். அங்க மனிதர்களும் அழியாத உயிரினங்களும் சேர்ந்து வாழுறாங்க.
Eve City-ல ஒரு பெரிய பிரச்சனை உருவாகுது. யாரோ ஒரு வில்லன் அந்த நகரத்தோட மாய சக்திய திருடி, மனித உலகம் மற்றும் அழியா உலகம் ரெண்டையும் அழிக்க பிளான் பண்றான்.
பிரையர், பிராம்பிள், விக் மூணு பேரும் தங்களுக்கு கிடைச்ச புது சக்திகளை வச்சு அந்த வில்லனை தடுக்கணும். ஆனா சக்தி இருந்தா மட்டும் போதாது. அதை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு இவங்களுக்கு தெரியாமல் இருக்கும்.
கதை முழுக்க இவங்க அந்த சக்திகளை பழகுறது, Eve City-ல இருக்குற வினோதமான உயிரினங்களோட சண்டை போடுறது, புதிர்களை தீர்க்குறது, நியான் மான்ஸ்டரோட உண்மையான நோக்கம் என்னனு கண்டுபிடிக்குறதுலயே இருப்பாங்க.
கடைசில மூணு பேரும் ஒண்ணா சேர்ந்து, டீம் வொர்க் பண்ணி வில்லனை ஜெயிச்சு, ரெண்டு உலகத்தையும் காப்பாத்துறாங்க. நியான் மான்ஸ்டரும் உண்மையிலேயே இவங்களுக்கு உதவ தான் வந்திருக்குனு தெரிய வரும். பேண்டஸி, அட்வென்சர், காமெடி மூணும் கலந்திருக்கும்.
இந்தியாவில் ஜூன் 26, 2026 அன்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் 3D-யில் வெளியாகிறது.

