அனந்தன் காடு விமர்சனம்

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், ஆர்யா, நிகிதா விமல், ரெஸினா காசாண்ட்ரா, இந்திரன்ஸ், சுனில், அஜய், சித்திக், போஸ் வெங்கட், தேவ் மோகன், ரெஞ்சி பணிக்கர், சாந்தி பாலச்சந்திரன், அஞ்சலி பி நாயர், அச்சுத்குமார், விஜயராகவன், அல்சின் பென்னி, சரத் அப்பானி, சாகர் சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளிவர உள்ள படம் அனந்தன் காடு.

 

ராணுவத்தால் ஈழத் தமிழர்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளோடு படம் ஆரம்பமாகிறது. 

 

ஒரு காலகட்டத்தில் அனந்தன் காடு என்று கூறப்பட்ட கிராமத்தை மையமாக வைத்து அங்குள்ள அதிகார அமைப்புகள், மக்களை எவ்வாறு வழிநடத்துகின்றன. 

 

அந்த கிராமத்தில் இந்தியன் தலைமையில் நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் தங்களுக்கு வன்முறையான வழியை தேர்ந்தெடுக்கிறார்கள் அதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். 

 

அதுமட்டும் இல்லாமல் அவர்கள் ஒரு இசைக் குழுவையும் நடத்தி வருகிறார்கள். அரசியல்வாதியும் காவல்துறை அதிகாரியும் சொல்கின்ற கொலைகளை செய்கிறார்கள். 

 

ஆனால் அவர்களுக்கு அதற்கான சரியான பணம் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர்களை கேள்வி கேட்க முடியாத ஒரு சூழ்நிலையில் அவர்கள் இருந்து வருகிறார்கள். 

 

அவர்களிடம் ராணுவத்தால் தாய், தந்தை, தங்கை, தம்பி, என அனைவரையும் இழந்த ஒரு போராளியான ஈழத் தமிழரான ஆர்யா வந்து தஞ்சமடைகிறார். 

 

ஒரு கட்டத்தில் அரசியல்வாதியான முரளி கோபியும் காவல்துறை அதிகாரியாக இருக்கும் சுனிலும், அந்த இந்திரன்ஸ் தலைமையிலான அந்த நால்வர் படையை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார்கள். 

 

அந்த நால்வரும் கொலை செய்யப்பட்டார்களா? இல்லையா ?ஆரியா இவர்களிடம் தஞ்சம் அடைய காரணம் என்ன? ஆர்யா அவர்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்ற பல கேள்விகளுக்கான விடையே அனந்தன் காடு படத்தோட மீதி கதை.

 

தொழில்நுட்பக் கலைஞர்கள்

 

இயக்குனர் : ஜியென் கிருஷ்ணகுமார்

கதை, திரைக்கதை, வசனம் : முரளி கோபி

தயாரிப்பாளர் : எஸ். வினோத் குமார்

ஒளிப்பதிவு : எஸ். யுவா

படத்தொகுப்பு : ரோஹித் வி. எஸ். வாரியத்

இசை : பி. அஜனீஷ் லோக்நாத்

சண்டைப்பயிற்சி : ஆர். சக்தி சரவணன்

பாடல்கள் : பழநிபாரதி, முரளி கோபி

மக்கள் தொடர்பு: ரியா

ஸ் கே.அஹ்மத் & பாரஸ் ரியாஸ்