சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவியா அனில், பாலாஜி சக்திவேல், மூர்த்தி, அருள்தாஸ், ஜென்சன் திவாகர், பாடினி குமார், முனிஷ்காந்த், பக்ஸ், வினோதினி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நூறு சாமி.
நாயகி ஸ்வாசிகா இளம் வயதில் கணவரை இழந்துவிட்டு, விதவையாக இருந்து, தன்னுடைய இரு மகன்களான அஜய் திஷான், சக்தி இவர்களுக்காகவே வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாள் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அருள் தாஸ் தங்களுக்கு மறுமணம் செய்ய விருப்பமா என்று கேட்கும் பொழுது தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கிறார்.
அருள்தாஸ் அதனை மூத்த மகன் அஜய் திஷானிடம் சொல்கிறார். அதற்கு அஜய்திஷான் கோபப்பட்டு, அம்மாவிடம் எதிர்ப்பு காட்டிவிட்டு ஊருக்கு சென்று விடுகிறார்.
அங்கு சென்ற பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகி படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறார். ஒரு நாள் ஸ்வாசிகா ஒரு வெளிநாட்டு ரூபாய் நோட்டில் இது முற்றுப்புள்ளி தான் என்று எழுதுகிறார். அதை பார்த்த பிறகு அஜய் திஷான் மனதை தேற்றிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துகிறார்.
நாட்கள் கடக்க நான்கு ஆண்டுகள் கழித்து தனியாக தொழில் தொடங்கும் அஜய் திஷான், அவருடைய அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அதற்கு அவருடைய தம்பி ஆன சக்தியும் ஆதரவு தெரிவிக்கிறார்.
இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து தன்னுடைய அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதற்கு அவருடைய சொந்தக்காரர்களும், ஊர்க்காரர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
தன்னுடைய உறவினர்கள் ஊர்மக்கள் ஆகியவற்றின் எதிர்ப்பை மீறி தன்னுடைய அம்மாவிற்கு இருவரும் மறுமணம் செய்து வைத்தார்களா? இல்லையா? என்பதே நூறு சாமி படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து மற்றும் இயக்கம் : சசி
படத்தொகுப்பு : ஹரிஷ் யுவராஜ்
இசை : பாலாஜி ஸ்ரீ ராம்
ஒளிப்பதிவு : எஸ் பி தர்ஷன் கிர்லோஸ்
தயாரிப்பு நிறுவனம் : விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
தயாரிப்பாளர்கள் : பாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி
மக்கள் தொடர்பு : நிகல் முருகன்

