ராம்தேவ் இயக்கத்தில், ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதாரவி, பழ கருப்பையா, கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், இயக்குனர் பேரரசு, அக்னி எஸ் வருண், இயக்குனர் சி ரங்கநாதன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மக்கள் தலைவா.
தமிழ் குடிமகனாக இருக்கும் நாயகன் ரவிமரியா எந்த வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்த்து வைப்பதற்காக பல போராட்டங்களை நடத்தி அதன் மூலம் அந்த பிரச்சனைகளுக்கு காரணமானவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.
இதனைத் தெரிந்து கொள்ளும் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் ராதாரவி ஒரு அரசியல் நாடகத்தை நிறைவேற்ற நினைக்கிறார்.
அதனால் ராதாரவி ரவி மரியாவை அழைத்து திரைப்படத்துறையில் நடிகராகி பின் நீ ஒரு அரசியல்வாதியாக ஆகி கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார். ரவிமரியா முதலில் மறுத்து விட்டு சென்று விடுகிறார்.
பிறகு சில விஷயங்களை யோசித்துப் பார்த்து ராதாரவி சொல்லியபடி நடப்பதற்கு முடிவு செய்து அவர் கொடுக்கும் பாத்திரத்தில் கையெழுத்தும் இடுகிறார்.
அதன் பிறகு சினிமாவில் நடித்து பெரிய நடிகராகி பிறகு உள்ளே வெளியே என்ற அரசியல் கட்சி ஆரம்பித்து அதன் மூலம் மக்களுக்கு பல திட்டங்களை அறிவித்து தேர்தலில் போட்டியிடுகிறார் ரவி மரியா.
அந்தக் கட்சியில் ராதாரவி இணைகிறார். அந்தக் கட்சிக்கு ஏழு வண்ணங்களில் கொடியை அமைத்து கட்சி கொடியாக அமைக்கிறார்கள்.
ரவி மரியா தேர்தல் வாக்குறுதியாக பிரச்சாரத்தின் போது தங்களுடைய கட்சி வெற்றி பெற்றால் மக்களில் ஒருவரையே தேர்ந்தெடுத்து அவரே முதல்வராகலாம் என்றும் சொல்லிவிடுகிறார்.
தேர்தலுக்கு முன்னதாக ஒரு விபத்தில் ரவி மரியாவுக்கு விபத்து ஏற்பட்டு சுயநிர் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரவி மரியா குணமடைந்து வந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாரா? இல்லையா?
அக்கட்சி வெற்றி பெற்று மக்களில் யாரை முதல்வர் ஆக்கினார்கள்? என்பதே மக்கள் தலைவா படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து & இயக்கம் : ராம்தேவ்
ஒளிப்பதிவு : கார்த்திக் எஸ் நாயர் படத்தொகுப்பு : துர்காஷ். எஸ்
இசை : துளசிராமன்
தயாரிப்பு நிறுவனம் : கவிதாலயா சரவணன் க்ரியேஷன்ஸ்
மக்கள் தொடர்பு : வேலு

