சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஒய் ஜி மகேந்திரா, சுகாசினி மணிரத்னம், ராஜ் ஐயப்பா, ரம்யா பாண்டியன், சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், மதுவந்தி, தீனா ரித்விக் பிரித்திகா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாருகேசி.
ஒய் ஜி மகேந்திரன் உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசை இத்வானாக இருக்கிறார் சங்கீதமே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். அவருடைய மனைவியாக சுகாசினியும் மகனாக ராஜ் ஐயப்பாவும் இருக்கிறார்கள்.
மகன் ராஜ் ஐயப்பா தந்தையான ஒய் ஜி மகேந்திரனை துளி கூட மரியாதை கொடுக்காமல் நடந்து வருகிறார். ஒரு நாள் ராஜ் ஐயப்பா ரம்யா பாண்டியனை திடீரென்று திருமணம் செய்து கொண்டு வருகிறார்.
ஆனால் மகனை எதுவும் சொல்லாமல் இருவரையும் ஏற்றுக் கொள்கிறார்கள் ஒய் ஜி மகேந்திரன் சுகாசினியும். மருமகளான ரம்யா பாண்டியன் கடந்த காலத்தை கூறி அவர்களை நிம்மதி இல்லாமல் செய்கிறார்.
ஒரு நாள் கடற்கரையில் ஒய் ஜி மகேந்திரன் அமர்ந்திருக்கும் சமயத்தில் சத்யராஜ் மனிதக்கடவுளாக நேரில் வந்து அவருக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறார்.
ஒரு சூழ்நிலையில் பயிற்சி மகேந்திரனுக்கு அல்சைமர் நோய் ஏற்பட்டு பாதிப்படைகிறார்.
தன்னுடைய குடும்பத்தினர் தான் பாடிய ராகங்கள் என எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்.
ஒய் ஜி மகேந்திரனுக்கு மீண்டும் பழைய நினைவுகள் வந்ததா? இல்லையா? ரம்யா பாண்டியன் எதற்கு ராஜ் ஐயப்பாவை திருமணம் செய்தார்? ரம்யா பாண்டியனுக்கும் ஒய் ஜு மகேந்திரன் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? போன்ற பல கேள்விகளுக்கான விடையே சாருகேசி படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : சுரேஷ் கிருஷ்ணா
இசை இயக்குனர் : தேனிசை தென்றல் தேவா
ஒளிப்பதிவாளர் : சஞ்சய் பி எல்
வசனம் மற்றும் பாடல்கள் : பா விஜய்
கதை : வெங்கட்
படத்தொகுப்பு : ரிச்சர்ட்
கலை இயக்குனர் : வாசுதேவன்
நடன இயக்குனர்கள் : கலா, அசோக்ராஜ், ஸ்வர்ணா
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்

