பெத்தி விமர்சனம்

விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்திரிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இராணி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பெத்தி.

நாயகன் ராம் சரண் மலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ஊர் மக்கள் எல்லோரும் பாராட்டக்கூடிய அளவுக்கு கிரிக்கெட் வீரராக இருக்கிறார்.

கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய விளையாட்டு வீரராக இருந்தாலும் அங்குள்ள மேல் தட்டு மக்கள் இவரை மலை சாதி என்று கருதி தள்ளி வைக்கிறார்கள்.

அமைச்சரின் பெண்ணாக வரும் ஜான்வி கபூரை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் ராம்சரண். ஜானி கபூர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய போகும் இடங்களுக்கெல்லாம் இவரும் போகிறார்.

அப்படி ஒரு நாள் பிரச்சாரம் செய்யும் போதும் சமயத்தில் எதிர் தரப்பினர் ஜான்வியை அவமானப்படுத்துகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராம்சரண் அவர்களை வெளுத்து வாங்குகிறார். தன்னிடம் கூலிக்கு விளையாடும் ஒரு மலை சாதி ஆட்டக்காரன் தன்னை அடித்துவிட்டார் என்பதற்காக அவனை அடுத்த முறை ஆட்டத்தில் அவமானப்படுத்துகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ஜெகபதி பாபு  மலை சாதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கும் அலைகிறார் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

ரயிலின் எதிரே நின்று உயிரை மாய்த்துக் கொள்கிறார்.

இதனால் கோபம் அடைந்த ராம் சரணம் ஊர் மக்களும் ரயிலின் தண்டவாளத்தை பெயர்த்து எடுத்து எரித்து விடுகிறார்கள்.

காவல்துறை அவர்களை கைது செய்து அடித்து சித்திரவதை செய்கிறது.

இறந்தாலும் சரி உயிருடன் இருந்தாலும் சரி உங்களுக்கு அடையாளம் தேவை என்று ஒரு காவல் துறை அதிகாரிக்கு சொல்கிறார்.

அதற்காக குஸ்தி சொல்லித் தரும் சிவராஜ்குமாரிடம் சென்று குஸ்தி கற்றுக்கொண்டு தன்னுடைய அடையாளத்தை நிரூபிக்க நினைக்கின்றார் ராம் சரண்.

தன் கிராமத்துக்கான அங்கீகாரத்தை ராம்சரண் வாங்கி தந்தாரா? இல்லையா?  மல்யுத்தத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே பெத்தி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்பக்  கலைஞர்கள்

இயக்கம் : புச்சி பாபு சனா

இணை தயாரிப்பாளர் : ஈஷான் சக்சேனா இசைஷ: ஏ.ஆர். ரஹ்மான்

ஒளிப்பதிவு : ஆர். ரத்னவேலு

படத்தொகுப்புஸ: நவீன் நூலி

மக்கள் தொடர்பு : யுவராஜ்