இரட்டையர் விமர்சனம்

ஜெகதீஷ் தம்பையா இயக்கத்தில், அபிநயா அனுமிதா, அனுஷிதா, சுப்பிரமணிய சிவா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் இரட்டையர்.

நாயகி அபிநயா தன்னுடைய கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்கள் ஒரு நாள் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே சமயம் ஒரு வீட்டில் அக்காவிற்கும் தம்பிக்கும் ஏற்படும் சிறிய தகராறில் வாசலில் இருந்த சிலிண்டர் தள்ளிவிடப்படுகிறது அது உருண்டோடி வந்து அபிநயா பயணிக்கும் காரில் மோதி  விபத்துக்குள்ளாகிறது. 

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபிநயா கண் விழித்ததும் தன் கணவரையும் குழந்தைகளையும் பற்றி கேட்கிறார்.

கணவர் இறந்து விட்டதாக மாமா சுப்பிரமணிய சிவா கூறுகிறார்.  பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் மீண்டும் முகம் அதே மாதிரி வந்து விடும் என்று மருத்துவர் கூற அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. 

சில நாட்கள் கழித்து அபிநயா குணமடைந்து வீட்டிற்கு திரும்புகிறார். அப்பொழுது அபிநயாவின் குழந்தைகள் அபிநயாவை தன்னுடைய அம்மா இல்லை என்று  சந்தேகப்படுகிறார்கள். 

நாட்கள் கடக்க அபிநயாவின் செயல்களிலும் அந்த குழந்தைகளுக்கு மாற்றங்கள் தெரிய, அவர்கள் இது  தங்களுடைய அம்மா இல்லை என்று முடிவு செய்து தன் அம்மாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். 

அந்த இரட்டை குழந்தைகளான அனுமிதா, அனுஷிதா அபிநயா யாரென்று கண்டுபிடித்தார்களா? தன்னுடைய அம்மாவிற்கு என்னவானது என்பதை தெரிந்து கொண்டார்களா? அங்கு வந்திருப்பது அபிநயா இல்லையென்றால் வேறு யார்? போன்ற கேள்விகளுக்கான விடையே இரட்டையர் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : ஜெகதீஷ் தம்பையா 

இசை : ஜி கே வி 

ஒளிப்பதிவு : முகமது அமீன் 

எடிட்டிங் : ஈஸ்வரமூர்த்தி

தயாரிப்பு : ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத்கண்ணன்

மக்கள் தொடர்பு : மணி மதன்