பரிமளா அண்ட் கோ விமர்சனம்

பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், ஜிகேஎம் தமிழ்குமரன், பூர்ணிமா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பரிமளா அண்ட் கோ.

ஜெயராமும் ஊர்வசியும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சஞ்சனா அனந்திகா என்ற இரண்டு மகள்கள். இரண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே ஜாலியாக இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினர்.

ரவுடியாவும் கஞ்சா விற்றுக்கொண்டும் ரவுடியாக இருக்கும் சாண்டி ஜெயராமனின் இரண்டாவது மகளை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சாண்டி வீட்டிற்கு நேரடியாக வந்து ஜெயராமிடம் உன் மகளை எனக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று கூறி ரகளை செய்கிறார். 

அந்த சமயத்தில் மூத்த மகளான சஞ்சனா சாண்டியிடம் சண்டை போட்டு சாண்டியை அரைந்து விடுகிறார்.

இதனால்  சாண்டி உன்னுடைய இரண்டு மகளையும் எனக்குத்தான் திருமணம் செய்து தர வேண்டும் என்று கூறி சென்று விடுகிறார். 

அது மட்டும் இல்லாமல் போகும் இடமெல்லாம் ஜெயராமிடமும்  ஊர்வசியிடமும் மகளை கல்யாணம் பண்ணி தர சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறார். 

ஒரு கட்டத்தில் ஜெயராமின் குடும்பம் சாண்டியை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறது. பிறகு வேண்டாம் என்று முடிவு எடுத்து  விடுகிறார்கள். 

தீபாவளி அன்று காலையில் கோயிலுக்கு சென்று விட்டு வரும்பொழுது சாண்டியை யாரோ கையை வெட்டி விட்டு கொலை செய்து இருக்கிறார்கள். 

அதை கேள்விப்பட்ட நால்வரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சான்டியின் கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக மிஸ்கினும் தமிழ் குமரனும் வருகிறார்கள். 

சாண்டியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? ஜெயராமின் குடும்பம் தான் சாண்டியை கொலை செய்ததா? கொலையாளியை  காவல்துறை அதிகாரியான மிஸ்கின் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே பரிமளா அண்ட் கோ படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : பாண்டிராஜ் 

தயாரிப்பு : சுபாஸ்கரன் – லைகா புரொடக்‌ஷன்ஸ்

ஜிகேஎம் தமிழ்குமரன் – தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

பாண்டிராஜ் – பசங்க புரொடக்ஷன்ஸ்

இசை : ஃபாக்ஸ்ன்

எடிட்டர் : பிரதீப் இ ராகவ்

கலை இயக்குனர் : டி.ராமலிங்கம்

ஸ்டண்ட் மாஸ்டர்: கலை கிங்சன்

நடனம் : சாண்டி, பாபா பாஸ்கர்

மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏஐஎம்)