ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பிளாஸ்ட்.
நாயகன் அர்ஜுன் கராத்தே பயிற்சி ஆசிரியராக இருந்து வருகிறார். அதனால் தன்னுடைய மகளான பிரீத்தி முகுந்தனுக்கு சிறு வயது முதலே கராத்தே பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் எங்கு தப்பு நடந்தாலும் யாருக்கு தப்பு நடந்தாலும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க கூடாது அதனை தட்டி கேட்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார்.
மகள் ப்ரீத்தியும் எந்த இடத்தில் தப்பு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கிறார் இதனால் அவருக்கு சிறிய சிறிய பிரச்சனைகள் ஏற்படுகிறது. அம்மா அபிராமி அறிவுரை கூற அதன்படி அமைதியாக இருந்து வர பழகுகிறார்.
ஒரு சமயத்தில் ப்ரீத்தியின் செயினை பறிக்க ஒரு நபர் முற்பட அவரை வழக்கம் போல தன்னுடைய கராத்தையால் அடித்து துவைத்து போலீசில் பிடித்துக் கொடுக்கிறார்.
இது ஒரு சிறிய திருட்டு தான் என்று நினைக்கும் அர்ஜுனும் ப்ரீத்தியும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க நினைக்கும் பொழுது அது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது தெரிய வருகிறது.
இதனால் அர்ஜுனுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்ன அபிராமியும் மற்றும் குடும்பமே அதிரடியில் ஈடுபடுகிறது.
அது மட்டுமில்லாமல் இது தங்களுடைய பிரச்சனை மட்டுமல்ல பல மக்களுக்கான பிரச்சினை என்று தெரிந்து கொண்ட அர்ஜுனனும் ப்ரீத்தியும் அவர்களை காப்பாற்ற என்ன செய்தார்கள்? அந்த பிரச்சனை என்ன? அந்த பிரச்சனைக்கான காரணம் யார்? என்பதே பிளாஸ்ட் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் : ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள் : கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : அர்ச்சனா கல்பாத்தி
அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா கல்பாத்தி
சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்குகிறார்
இசை : ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : அருண் ராதாகிருஷ்ணன்
எடிட்டர் : பிரதீப் இ ராகவ்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: வீரமணி
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

