வாரண்ட் இணைய தொடர் விமர்சனம்

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள் தாஸ், நம்ரிதா எம்.வி, அருள் ஜோதி, சாயா தேவி, வணக்கம் கந்தசாமி, மீனா, கௌசல்யா, வையாபுரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள இணைய தொடர் வாரண்ட்.

பாலாஜி சக்திவேல் தன்னுடைய ஒரே மகனான நாயகன் பிரசாந்த் பாண்டியராஜனை எப்படியாவது கஷ்டப்பட்டு அரசு ஊழியர் ஆக்க வேண்டும் என்று பலவிதமான அரசு தேர்வுகளை எழுத வைக்கிறார்.

ஆனால் எந்த தேர்விலும் பிரசாந்த் தேர்வு பெறாமல் போக கடைசியில் காவல்துறையில் பணியாற்றும் உறவினரான காளி வெங்கட் மூலம் அவரை போலீஸ் கான்ஸ்டபிள் ஆக ஆக்குகிறார்.

காவலராக வேலைக்கு சேர்ந்த பிரசாந்த் பாண்டியராஜுக்கு கைதியை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஒரு சூழ்நிலையில் அந்த கைதி பிரசாந்த் பாண்டியராஜை தாக்கி விட்டு தப்பித்து விடுகிறார்.

ஆனால் அங்குள்ள மற்ற காவலர்கள் அவரை மதிக்காமல் கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்துகிறார்கள்.

இதனால் மனமுடைந்து அந்த வேலையை விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மாமா காளி வெங்கட் மூலம் அப்பா  பாலாஜி சக்திவேலுக்கு அந்த விஷயம் தெரிய வருகிறது.

பாலாஜி தன்னுடைய மகனிடம் எந்த இடத்தில் அவமானப்பட்டாயோ அந்த இடத்தில் உன்னுடைய திறமையையும் வளர்ச்சியையும் நிரூபிக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கூறுகிறார்.

அதன் பிறகு பிரசாந்த் பாண்டியராஜன் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்காக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்? என்ன மாதிரியான பிரச்சனைகளை கையாளுகிறார்? அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் நீக்கப்பட்டதா? இல்லையா? என்பதே வாரண்ட் இணைய தொடருடைய மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

கதை, திரைக்கதை, வசனம் : பிரசாந்த் பாண்டியராஜ் & விக்னேஷ் நடராஜன்

இயக்கம் : விக்னேஷ் நடராஜன்

தயாரிப்பு : பிரசாந்த் பாண்டியராஜ், பி விஷால், பி எம் ஆதிஸ்வர்

பின்னணி இசை : சாம் சிஎஸ்

ஒளிப்பதிவாளர் : அசோக் குமார்

எடிட்டர் : ஆர் ராமர்

மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)