29 விமர்சனம்

ரத்தினகுமார் இயக்கத்தில், விது, ப்ரீத்தி அஸ்ரானி, அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன், கிரன், சிந்து ஷியாம், பிரேம்குமார், ஆதிரா, ஆறுமுகவேல், ஷேனாஸ், பாத்திமா, சதீஷ்குமார்  ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 29.

நாயகன் விது 29 வயதில் எந்த ஒரு லட்சியமும் இன்றி, தன்னுடைய வேலையை மட்டுமே பார்த்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வேலை செய்யும் அலுவலகத்திலேயே நாயகி ப்ரீத்தியும் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் வர, தன்னையும் ஒரு பெண்  விரும்புகிறாளே என்று ப்ரீத்தியை ஆழமாக காதலிக்க ஆரம்பிக்கிறார். 

இருவருக்கும் காதல் நன்றாக சென்று கொண்டிருக்கும் சமயத்தில், நாயகி ப்ரீத்தி தன்னுடைய லட்சியமான ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவினை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறார். அதனால் தன்னுடைய காதலையும் சிறிது விளக்கி வைக்கிறார். 

நாயகன் விதுவோ ப்ரீத்தியையே முழுக்க முழுக்க தன்னுடைய உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்க ப்ரீத்தி என்னிடம் இருந்து விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார். 

இதனால் பிரீத்திக்கும் விதுவுக்குமிடையே பிரிவு ஏற்படுகிறது. நாயகன் விதுவும் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்கிறார். 

விதுவின் முயற்சி நிறைவேறியதா? இல்லையா? விதுவும் ப்ரீத்தியும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை 29 படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : ரத்னகுமார் 

தயாரிப்பு : லோகேஷ் கனகராஜ் & கார்த்திகேயன் 

ஒளிப்பதிவு : மாதேஷ் மணிக்கம் 

இசை : சான்ரோல்டன் 

மக்கள் தொடர்பு : சதீஷ்