பிரேக்ஃபாஸ்ட் விமர்சனம்

ஏ ஆர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ராணவ், ரோஸ்மின், சம்பத்ராஜ், கஸ்தூரி, அர்ச்சனா, கிரித்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் பிரேக்ஃபாஸ்ட்.

நாயகன் கிரித்திக் மோகனும் நாயகி அமிதா ரங்கநாத்தும் ஜோடியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதமே ஆகின்ற நிலையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். 

நீதிமன்றத்தில் நீதிபதி அவர்களை மருத்துவர் ஜான்வியிடம் கவுன்சிலிங்க்கு  அனுப்புகிறார்.

அங்கு போயும் அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனைப் பார்த்த  மருத்துவரான கஸ்தூரி அவர்களிடம் ஒரு படத்தின் கதையை கூறுகிறேன் கேளுங்கள் என்று சொல்கிறார். 

அந்தக் கதையில் தொழிலதிபரின் மகளாக இருக்கிறார் நாயகி ரோஸ்மின், சரியான வேலை இல்லாமல் கஷ்டப்படும் கிராமத்து இளைஞராக இருக்கிறார் நாயகன் பிக் பாஸ் ராணவ்.

ஒரு நாள் ரோஸ்மினின் அலுவலகத்திற்கு ஒரு மிஷன் ரிப்பேர் செய்வதற்காக வருகிறார் ராணுவ். அதனை சரியான நேரத்தில் ரிப்பேர் செய்து விடுகிறார். அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு ராணவும் அங்கிருந்து சென்று விடுகிறார்.

மற்றொரு நாள் ராணவ் துப்புரவு தொழில் செய்து வருவதை பார்க்கும் ரோஸ்மின் அவரை அழைத்து அவருக்கு அவருடைய கம்பெனியிலேயே ஒரு நல்ல வேலை போட்டு தருகிறார். 

ஒரு கட்டத்தில் இவர்களுடைய நட்பு காதலாக மாறுகிறது இவர்களுடைய காதலுக்கு ரோஸ் மினின் அப்பாவான சம்பத்ராஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார். 

தன்னுடைய அப்பாவின் எதிர்ப்பை மீறி ரோஸ்மின் ராணவை திருமணம் செய்து கொள்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பதவியையும் அவருக்கு கொடுத்து வசதியான வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கிறார். 

சில நாட்களில் இருவருக்குள்ளும் மிகப்பெரிய விரிசலும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்து பிரிகின்றனர். 

அதன் பிறகு இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட காரணம் என்ன? என்பதே பிரேக்ஃபாஸ்ட் படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : ஏ ஆர் காந்தி கிருஷ்ணா 

இசை : ஜிவி பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவு : எம் வி பன்னீர்செல்வம் படத்தொகுப்பு : எஸ் பாஸ்கர் & சுஜித்

தயாரிப்பு : கிரிஜா வரதராஜ் 

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா (டி ஒன்)