ரூம்பாய் விமர்சனம்

ஜெகன் ராயன் இயக்கத்தில், நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், இன்ஸ்டா புகழ் கற்பகம், youtube புகழ் காத்து கருப்பு கலை, கவிதா விஜயன், சிட்டி ராஜா, சமீர், அருண் ராஜா, பிரபாகர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவர உள்ள படம் ரூம் பாய்.

ஏலகிரியில் இருக்கும் ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றில் இளைஞர்கள் பல வேலை பார்க்கிறார்கள். அவர்களை கட்டாயப்படுத்தி அவர்களின் சான்றிதழை வாங்கி வைத்துக்கொண்டு அங்கு வேலை வாங்குகிறார் அந்த ஹோட்டலில் மேனேஜர்.

அந்த ஹோட்டலில் வேலை செய்ய பிடிக்காமல் அங்கிருந்து தப்பிக்க நினைக்கும் இளைஞர்களை அடித்து அவர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்துகிறார்.

அந்த ஹோட்டலில் அவர்களை அப்படி துன்புறுத்துவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு அறையிலும் ஹிடன் கேமரா வைத்து, அந்த ஹோட்டலில் வந்து தங்கும் ஜோடிகளை அவர்களின் வீடியோக்களை பதிவு செய்து, அதனை காட்டி அவர்களிடம் பிளாக்மெயில் செய்து பணத்தை பறிப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் செய்கிறார்கள்.

அந்த ஹோட்டலில் நாயகன் நிகில் வேலைக்கு சேர்கிறார். அங்கு நடக்கும் சம்பவங்களை பார்த்து கண்டும் காணாமல் இருந்து வருகிறார்.

ஒரு நாள் அந்த ஹோட்டலில் முகமூடி அணிந்த நபர் அங்கு நடக்கும் ஹிடன் கேமரா விஷயங்களை தெரிந்து கொண்டு, மேனேஜரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்று விடுகிறார்.

அந்த நபர் யார்? எதற்காக அங்கு வந்தார்? அந்த மேனேஜரை கொடூரமாக கொலை செய்ய காரணம் என்ன? நாயகன் நிகில் அந்த ஹோட்டலில் நடந்த விஷயங்களை பார்த்து ஏன் மௌனமாக இருந்தார்? என்ற பல கேள்விகளுக்கான விடையே ரூம் பாய் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : ஜெகன் ராயன் 

இசை : வேலன் சகாதேவன் 

படத்தொகுப்பு : டி வி மீனாட்சி சுந்தர்

ஒளிப்பதிவு : சி பாரதி ராஜன் 

பாடல்கள் : சூரியமூர்த்தி 

சண்டை : கார்த்திக் வர்மன் 

நடனம் : தினா 

தயாரிப்பு நிறுவனம் : ஏ‌சிஎம் சினிமாஸ் தயாரிப்பு : சூரியகலா சந்திரமூர்த்தி 

மக்கள் தொடர்பு : மணவை புவன்