விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, சீமான், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, கௌரி ஜி கிஷன், ஷாரா, ஆனந்த்ராஜ், மாளவிகா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லிக் (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி).
எஸ் ஜே சூர்யா காதல் திருமணம் செய்து கொண்ட திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியின் காரணத்தால் எந்த காதலர்களுக்கும் இப்படி ஒரு நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக 2040 ஆம் ஆண்டில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி லிக் என்ற ஒரு ஆப்பை உருவாக்குகிறார்.
இந்த ஆப் மூலம் அறிமுகமாகி அவர்கள் நண்பர்களாக இருக்கிறார்களா? இல்லை காதலியாக இருக்கிறார்களா அதற்கு எவ்வளவு பர்சன்டேஜ் என்று அந்த ஆப் கணித்து கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரமும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கவும் இந்த ஆப்பின் மூலம் முடியும்.
இதனால் காதலர் யார் ஏமாற்றுகிறார்கள்? யார் உண்மையாக இருக்கிறார்கள் என்பது எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது.
இந்த ஆப் காதலர்களிடமும் இளைஞர்களிடமும் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆப்புக்கு குரல் கொடுத்து கொண்டிருப்பவர் நாயகன் பிரதீப் ரங்கநாதன்.
சிறு வயதில் இருந்தே நாயகி கீர்த்தி ஷெட்டி ஸ்மார்ட் போன் துணையுடனே வளர்ந்து வருவதால், அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதில் அதிக பாலோவ்ஸ்களை பெறுவதே முக்கியம் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கீர்த்தி ஷெட்டியின் தாயாக மாளவிகா இருக்கிறார். அவர்களுடனே குடும்பத்தில் ஒருவராக இருந்து வருகிறார் யோகி பாபு.
இந்த ஸ்மார்ட் போன் மூலமாக ஏதேனும் தவறு ஏற்பட்டால் அவர்களை திருத்துவதற்காக பசுமை உலகம் என்ற பெயரில் தொழில்நுட்ப வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு இடத்தை உருவாக்கி நடத்தி வருகிறார் சீமான். அவருடைய மகன் பிரதீப் ரங்கநாதன்.
பிரதீப் ரங்கநாதன் தொலைபேசியே இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் ஒரு நாள் கீர்த்தி ஷெட்டியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.
கீர்த்தி செட்டிக்காக தன் அப்பாவிற்கு தெரியாமல் ஒரு செல்போன் வாங்குவதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம் லிக் ஆப்பை இணைத்து கீர்த்தி ஷெட்டியுடன் நட்பை ஏற்படுத்தி பழக ஆரம்பித்து நாளடைவில் காதலாக மாறுகிறது.
அவர்களின் காதல் எந்த அளவிற்கு உண்மை என்பதை அந்த செயலியின் மூலம் தெரிந்து கொள்ள நினைக்கும் பொழுது அது அவர்களுக்குள் இருப்பதே வெறும் மூன்று சதவீதம் காதல் என்றே காட்டுகிறது.
இதனால் கீர்த்தி செட்டி இந்த காதல் ஒத்து வராது என்று சொல்லிவிட்டு பிரேக் அப் செய்து விடுகிறார்.
இந்த ஆப் தவறானது இது காதலை சரியாக காட்டவில்லை என்று எஸ் ஜே சூர்யாவிடம் சொல்லி அதனை போலி என்கிறார்.
ஆனால் சூர்யாவோ இல்லை தன்னுடைய கண்டுபிடிப்பானா லிக் ஆப் தவறானது இல்லை என்று வாதாடுகிறார்.
பிரதீப் ரங்கநாதன் எஸ் ஜே சூர்யாவிடம் இந்த ஆப் தவறு என்னுடைய காதல்தான் உண்மை என்றும் தான் 30 நாட்களுக்குள் கீர்த்தி ஷெட்டியை காதலிக்க வைத்து விட்டால் உங்களுடைய ஆப் தவறு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிவிடுகிறார்.
அதன் பிறகு அந்த லிக் ஆப்பை எப்படி தவறு என்று பிரதீப் ரங்கநாதரன் நிரூபித்தார்? கீர்த்தி ஷெட்டியிடம் தன்னுடைய காதலை புரிய வைத்தாரா? இல்லையா? இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை லிக் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து & இயக்கம் : விக்னேஷ் சிவன்
தயாரிப்பாளர் : நயன்தாரா
தயாரித்து வழங்குபவர் : எஸ்.எஸ்.லலித் குமார்
ஒளிப்பதிவு : ரவி வர்மன் ASC ISC
தயாரிப்பு வடிவமைப்பு : முத்துராஜ்தங்கவேல்
ஸ்டண்ட் : பீட்டர் ஹெய்ன்
எடிட்டர் : பிரதீப் இ ராகவ்
பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன்
கலை இயக்குனர் : கண்ணன் எஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்


