பைக்கர் விமர்சனம்

அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில், ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், நிரூப், மாஸ்டர் சௌர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பைக்கர்.

நாயகன் ஷர்வானந்த் அப்பா ராஜசேகர் போல தானும் பைக் ரேஸ்ராக வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய ஆர்வத்தை பார்த்து அவருடைய அப்பாவான ராஜசேகர் அவருக்கு குருவாக இருந்து இந்த துறையில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்கிறார். 

ஷர்வானந்தும் அந்த துறையில் நல்ல பயிற்சி பெற்று சிறந்த பைக் ரேஸ்ராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

அந்த சமயத்தில் ராஜசேகர் எதிர்பார்த்தது போல இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டை தன்னுடைய மகன் மூலம் உலகிற்கு சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. 

தன்னுடைய மகனை வைத்து அதனை செய்து முடிக்கலாம் என்று நம்பிக்கையோடு இருக்கும் ராஜசேகரை ஷர்வானந்த் ஏமாற்றிவிட்டு, பந்தயத்தில் முதல் பந்தயம் முடிந்ததும் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்று விடுகிறார். 

ஒரு நாள் தொலைக்காட்சியில் ராஜசேகர் தண்டிக்கப்படுவதும் அவரை துரோகி அவர் ஒரு மோசடிக்காரர் என்றும் ஒருவர் பேட்டியளிப்பதை பார்க்கிறார்.

இதனால் அப்பாவின் மேல் ஏற்பட்ட குற்றச்சாட்டை சரி செய்து அவரை தலை நிமிர்ந்து நிற்க செய்ய வேண்டும் என்று நினைத்து மீண்டும் அப்பாவிடம் வந்து மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார் ஷர்வானந்த்.

அதன்படி ஷர்வானந்த் அப்பாவின் ஆசையை நிறைவேற்றினாரா? மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்றாரா ?அப்பாவிடம் இருந்து ஷர்வானந்த் பிரிந்து செல்ல காரணம் என்ன? என்பதே பைக்கர் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

எழுத்து & இயக்கம்  : அபிலாஷ் ரெட்டி

தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபாட்டி

இசை : ஜிப்ரான் வைபோதா

பேனர்: UV கிரியேஷன்ஸ்

ஒளிப்பதிவு : ஜே யுவராஜ்

எடிட்டிங் : அனில் பசாலா

கலை இயக்குனர் : ஏ பன்னீர் செல்வம்

மக்கள் தொடர்பு : யுவராஜ்