கார்மேனி செல்வம் விமர்சனம்

ராம் சக்கரி இயக்கத்தில், சமுத்திரகனி, லட்சுமி பிரியா சந்திரமௌலி, கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, கரன் சக்ரவர்த்தி, கோதண்டம், மதுமிதா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கார்மேனி செல்வம்.

சமுத்திரகனியும் லட்சுமி பிரியா சந்திரமௌலியும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

சமுத்திரகனி கார் ஓட்டுனராக இருக்கிறார் லட்சுமி பிரியா தள்ளு வண்டியில் இட்லி கடை வைத்திருக்கிறார். வருமானத்திற்க்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்து மகிழ்ச்சியாக இருந்தாலும் சொந்த வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும் என்று தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக சமுத்திரகனி கடன் வாங்குகிறார். 

கடன் வாங்கி தன்னுடைய ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். அதற்கு தன் முதலாளியான கெளதம் வாசுதேவன் வெளியூருக்கு சென்ற சமயத்தில் அவருடைய காரை வாடகை காராக மாற்றி ஓட்டி பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் தன் தங்கையின் கணவரிடமும் கடனை வாங்குகிறார். 

ஆசை நிறைவேற்றுவதற்காக கடனில் மூழ்கும் சமுத்திரக்கனி, கடனை அடைப்பதற்காக வெளிநாடு செல்கிறார் ஆனால் அங்கும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார். இறுதியில் கடனிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே காரணம் கார்மேனி செல்வம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பாளர் : அருண் ரங்கராஜுலு

இயக்குனர் : ராம் சக்ரி

கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஸ்ரீ சரவணன்

டாப் யுவராஜ் தக்ஷன்

இசை : Musicloud ஸ்டுடியோ

படத்தொகுப்பு : ஜெகன் ஆர் வி – தினேஷ் எஸ்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்