நீளீரா விமர்சனம்

சோமிதரன் இயக்கத்தில், நவின்சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், விது, சிது குமரேசன், நவயுக்கா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம், தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நீளீரா.

தமிழ் ஈழ போராட்ட காலத்தில் ஒரு நீண்ட இரவில் நடக்கும் கதை தான் நீளீரா.

இலங்கை ராணுவத்திடமும் இந்திய ராணுவத்திடமும் ஒப்புதல் பெற்று திருமணத்தை நடத்துகிறார்கள். விடிந்தால் திருமணம் என்று வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 

இந்த சமயத்தில் போராளிகளை தேடி இந்திய ராணுவம் அவர்களின் வீட்டருகில் வருகிறது. 

அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் மாறி வந்து விடுவதால் அந்த வீட்டிற்குள் அடைக்கலம்  புகுகிறார்கள். 

இருப்பதை தெரிந்து கொண்டு மறுபுறம் போராளிகள் அவர்களை தாக்க தயாராக இருக்கிறார்கள். 

ஒருபுறம் போராளிகள் மறுபுறம் இந்திய ராணுவம் என அந்த திருமண வீட்டார் சிக்கிக் கொள்கிறார்கள். 

இந்திய ராணுவம் அவர்களை என்ன செய்தது? இந்திய ராணுவத்தை அந்த போராளிகள் என்ன செய்தார்கள்?  அசம்பாவிதம் ஏதும் நடந்ததா? இல்லை அந்த திருமணம் நல்லபடியாக நடைபெற்றதா? என்பதே நீளீரா படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : சுவாமிதரன் 

இசை : கே 

படத்தொகுப்பு : ராதா ஸ்ரீதர் 

ஒளிப்பதிவு : செல்வரத்னம் பிரதீபன்

தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் எஸ் & கார்த்திக் சுப்புராஜ்

மக்கள் தொடர்பு : நிகில்முருகன்