மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில், எஃப் ஜே, அய்ரா மோன பத்ரே, சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாத்தான் தீ டார்க்.
மோன பத்ரேவிற்கு இரண்டு மகள்கள் அவருடைய மூத்த மகளாக இருக்கிறார் அய்ரா. இரண்டாவது மகளாக இருப்பவருக்கு வாய் பேச முடியாது. இவர்கள் அஸ்தினாபுரம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
மோன பத்ரேவின் அம்மா பேய் பிடித்தவர் போல் இருப்பதால் அவரை வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார்கள்.
இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கும் சமயத்தில் மோன பத்ரேவின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஊரில் சில அசம்பாவிதங்களும் நடந்து வருகிறது.
மோன பத்ரேவின் நடவடிக்கைகளால் அவருடைய மகள் அய்ரா பயந்து வீட்டுக்குள்ளேயே அம்மாவை பூட்டி வைத்துவிட்டு சென்று விடுகிறார். இருப்பினும் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது. ஊர் மக்கள் இது அனைத்திற்கும் மோன பத்ரேதான் காரணம் என்று முடிவு செய்து ஒரு முடிவு எடுக்கின்றனர்.
ஊர் மக்கள் அப்படி என்ன முடிவு எடுத்தார்கள்? மோன பத்ரே இவ்வாறு மாறுவதற்கு காரணம் என்ன? அய்ராவிற்கு இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? என்பதே சாத்தான் தீ டார்க் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
தயாரிப்பு : எட்வர்ட்
இயக்கம் : மணிகண்டன் ராமலிங்கம் ஒளிப்பதிவு : பாலாஜி ராமசாமி
இசை : அஸ்வின் கிருஷ்ணா
படத்தொகுப்பு : ராஜ்குமார் & கோவை அபிஷேக்
மக்கள் தொடர்பு : ஏ. வெங்கடேஷ்

