திவ்யா விமர்சனம்

ஆர் ஜே பி இயக்கத்தில், ஆர் ஜே பி, கேத்தி, செந்தில், பவுன்ராஜ், அனந்த் ராம், கலாவதி,  சபி, ஜிவி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் திவ்யா.

நாயகன் ஆர் ஜே பி நாயகி கேத்தி இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். ஆர் ஜே பி வசதி இல்லாதவராகவும் கீழ் சமூகத்தை சேர்ந்தவராக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பறையடிப்பவராகவும் இருந்து வருகிறார். 

நாயகி கேத்தியோ வசதி படைத்தவராகவும் மேல் சமூகத்தை சார்ந்தவராகவும் இருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் சண்டைய ஏற்பட்டாலும் பிறகு இருவரும்  ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்கிறார்கள்.

கீழ் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால் வெறுப்பையே காட்டும் நபராக இருக்கிறார் கேத்தியின் அப்பா.

அப்படி இருப்பவர் தன் மகள் ஒரு கீழ் சமூகத்தை சேர்ந்தவரை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் அவரை கல்லூரியிலிருந்து நிறுத்தி, வீட்டில் வைத்து உறவினர் பையனுக்கு திருமணம் முடித்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார்.

அப்பா ஏற்பாடு செய்த மாதிரி கீர்த்தியின் திருமணம் நடந்ததா? இல்லையா? கேத்தியும் ஆர் ஜே பியும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே திவ்யா படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : ஆர் ஜே பி மீடியா 

இயக்கம் : ஆர் ஜே பி 

தயாரிப்பாளர் : கலா ரவி 

இசை : சங்கர் ராம் 

எடிட்டர் : வளர்பாண்டி 

ஒளிப்பதிவு : செல்வகுமார் 

மக்கள் தொடர்பு : சரண்