போலீஸ் ஃபேமிலி விமர்சனம்

எம் பாலு இயக்கத்தில், ராஜா மலைச்சாமி பருத்திவீரன் சரவணன், நிஷா தூபே, ரோஹன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம் எஸ் எல்வா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் போலீஸ் ஃபேமிலி.

இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாக தாக்கப்படுவதால் மயக்கம் அடைந்து விடுகிறார். அதனால் அந்தக் காவலர்கள் அவரை ஒரு மறைவான இடத்திற்கு எடுத்துச் சென்று போட்டு விட்டு வந்து விடுகின்றனர். 

மறுநாள் அவரை யாரும் கொலை செய்து விட்டதாக தெரிய வருகிறது. அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கப்பட்டது அவருடைய தந்தையான பருத்திவீரன் சரவணனுக்கு தெரிய வருகிறது.

தன்னுடைய மகனை கொலை செய்த காவலர்களை பழிவாங்க துடிக்கிறார் சரவணன். சரவணன் ஏற்கனவே சென்னையில் மிகப் பெரும் ரௌடியாக இருந்தவர் தன்னுடைய மகனுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு மதுரையில் வாழ்ந்து  வந்துள்ளார்.

தன் மகனின் மரணத்திற்கு சம்பந்தப்பட்ட காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய திட்டமிடுகிறார். இது தெரிந்தும் காவல்துறையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் இரண்டு காவலர்களின் குடும்பங்களை சரவணன் கொலை செய்து விடுகிறார்.

சரவணனின் மகன் கொலைக்கு யார் காரணம் என்பதை காவல்துறை கண்டுபிடித்ததா? இல்லையா? மீதம் இருக்கும் காவலர்களின் குடும்பத்தையாவது காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே போலீஸ் ஃபேமிலி படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : பாலு எம் 

இசை : ஜெயா கே தாஸ்

ஒளிப்பதிவு : ஜெயக்குமார் தங்கவேல்

படத்தொகுப்பு : எம் எஸ் செல்வா

கலை : மோகன் 

மக்கள் தொடர்பு : ஏ. ஜான்