கெணத்த காணோம் விமர்சனம்

சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரெபேக்கா சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கெணத்த காணோம்.

ராமநாதபுரத்தில் இருக்கும் ஒரு கிராமம் வறட்சி மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது அந்த கிராமத்தில் மழை இல்லாததால் அந்த கிராம மக்கள் அரசாங்கத்திடம் குடிநீருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் அந்த கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கிணறு வெட்டலாம் என்று முடிவு செய்கிறார்கள். அப்படி அவர்கள் கிணறு வெட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் யோகி பாபுவின் இருக்கும் இடத்தில் இருக்கிறது.

அந்த இடத்தில் கிணறு வெட்ட தோண்ட ஆரம்பிக்கும் பொழுது ஆறு அடி தோண்டும் போது அங்கு பெரிய பெரிய எலும்புகள் காணப்படுகிறது. இதனால் அந்த இடத்திற்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வருகின்றனர்.

அந்த இடத்தினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கைக்குள் கொண்டு வந்து அதனை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கின்றனர்.

அந்த ஆராய்ச்சியில் அந்த எலும்புகள் பல வருடங்களுக்கு முன்பு அழிந்து போன டைனோசரின் எலும்புகள் என்பது கண்டறியப்படுகிறது. 

அதற்குப் பிறகு அந்த இடத்தில் கிணறு தோண்டப்பட்டதா? இல்லையா? அந்த ஊருக்கு தண்ணீர் கிடைத்ததா? இல்லையா? யோகி பாபு இதற்காக என்ன செய்தார்? என்பதே கெணத்த காணோம் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : சுரேஷ் தங்கையா 

தயாரிப்பு : ரமேஷ்பாபு & ஜெகன் பஷீகரன் ஒளிப்பதிவு : தியாகராஜன் 

இசை : நிவாஸ் கே பிரசன்னா 

படத்தொகுப்பு : ராமர் 

மக்கள் தொடர்பு : ஏ வெங்கடேஷ்