கொலைச்சேவல் விமர்சனம்

துதிவானன் இயக்கத்தில், கலையரசன், தீபா பாலு, ஆதவ் சந்திரா, பாலசரவணன், கஜராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கொலைச்சேவல்.

கலையரசனும் தீபா பாலுவும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து, தீபா பாலு தன்னுடைய பெற்றோரை எதிர்த்து அவர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்கின்றனர்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலுவுடன் கலையரசன் தன்னுடைய கிராமத்திற்கு வருகிறார்.

கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலுவை அழைத்துக் கொண்டு குலதெய்வ கோயிலுக்கு சென்று படையலிட வேண்டும் என்று ஏற்பாடுகள் நடக்கிறது. 

அதற்காக கலையரசனின் குடும்பமும் அவருடைய நண்பர்களும் முன்பாகவே அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அந்த கோவிலுக்கு சென்று விடுகின்றனர்.

அதன் பிறகு கலையரசனும் தீபா பாலுவும் அங்கு செல்கின்றனர். அங்கு சென்று விட்டு சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் சென்று விடுகின்றனர். தீபா பாலுவிற்கு மயக்கம் வருவது போல் இருப்பதால் சற்று ஓய்வெடுத்து விட்டு செல்வதற்காக தீபாவும் கலையரசனும் அங்கு இருக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கொலைச்சேவல் படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : துதிவானன் 

ஒளிப்பதிவு : பி ஜி முத்தையா 

இசை : சாந்தன் 

படத்தொகுப்பு : அஜய் மனோஜ் 

தயாரிப்பு : ஆர்.பி பாலா & கௌசல்யா பாலா 

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்