அனோமி விமர்சனம்

ரியாஸ் மராத் இயக்கத்தில், பாவனா, ரஹ்மான், அர்ஜுன் லால், ஷெபின் பென்சன்,  விஷ்ணு அகஸ்தியா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அனோமி. 

நாயகி பாவனா விபத்து ஒன்றில் தன் அப்பா அம்மாவை இழந்து  விட்டு, தனது தம்பி செபின் பென்சன் மட்டுமே தன்னுடைய உலகம் என்று எண்ணி அவருடன் வாழ்ந்து வருகிறார்.

விபத்து நடந்த இடத்தில் தம்பி செபின் பென்ஷன்  இருந்ததால் அவருக்கு மனைவியாக பாதிப்பு  ஏற்படுகிறது. தடையறையில் நிபுணராக இருக்கும் பாவனா,  தன்னுடைய தம்பியை எங்கேயும் வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள்ளேயே அவரை பாதுகாத்து பத்திரமாக வளர்த்து வருகிறார். 

ஒரு தற்கொலை வழக்கை விசாரிப்பதற்காக சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு  வந்து பார்க்கும் பொழுது தம்பி ஷெபின் பென்சனை காணாமல் அதிர்ச்சி ஆகிறார். 

பதட்டத்துடன் பல இடங்களில் தேடி அலைகிறார் எங்கேயும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் பிணமாக கண்டெடுக்கப்படுகிறார் ஷெபின். 

இதனை இன்ஸ்பெக்டர் ரகுமான் தற்கொலை என்று பேசி முடித்து விடுகிறார். ஆனால் பாவனாவும் தன் தம்பி தற்கொலை செய்து கொள்ள மாட்டான் இது கொலைதான் என்று முடிவு செய்து அதனை முதற்கட்ட விசாரணையில் கண்டும் பிடிக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய தம்பி தம்பி மட்டும் இல்லை இதற்கு முன்பு நடந்தேறிய இரண்டு தற்கொலைகளும் தற்கொலை அல்ல கொலை தான் என்று நீதிபதி முன்பு வாதாடுகிறார் பாவனா. 

இதனால் நீதிபதி அந்த சைக்கோ கில்லரை விரைவில் தேடி கண்டுபிடிக்குமாறு ரஹ்மானிடம் கூறுகிறார். 

ரகுமான் ஒரு புறம் அந்த சைக்கோ கில்லரை தேடி அலைய மறுபுறம் தனது தம்பியை கொலை செய்த அனைத்து சும்மா விடமாட்டேன் என்று கூறி பாவனாவும் தேடுகிறார். 

அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? யார் அந்த  சைக்கோ கொலையாளி? எதற்காக இவ்வாறு கொலை செய்கிறார்? என்பதை  அனோமி படத்தோட மீதிக்கதை. 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : ரியாஸ் மராத்

தயாரிப்பு : குமார் மங்கட் பதக், அபிஷேக் பதக், பிளிட்ஸ்கிரி ஏஜி பிலிப்ஸ், பாவனா மற்றும் ஆதித் பிரசன்னகுமார் 

ஒளிப்பதிவு : சுஜித் சாரம் 

இசை : ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்

படத்தொகுப்பு : கிரியன்தாஸ் 

மக்கள் தொடர்பு : வெங்கடேஷ்